அண்ணாதுரை எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால்.
யூகமாக நிகழ்வது பற்றி பேசி, அது நிகழாமல் போனால், ‘நான் அப்போதே சொன்னேன்’ என சமாளித்து ஊர் வம்பு பேசுபவரை மையமாக வைத்து, ‘அப்போதே சொன்னேன்’ என்ற தலைப்பில் நாவலாக புனையப்பட்டுள்ளது. தங்கை கணவரின் நேர்மையையும், தம்பியின் நீதி பரிபாலனத்தையும் விறுவிறுப்பாக தருகிறது.
சாஸ்திர சம்பிரதாயங்களை உயிரினும் மேலாக பின்பற்றுகிறவர் பற்றிய கதையில், மகளை மண முடிக்க விரும்பிய மன்னரை, கோவில் நிலவறையில் சமாதியாக்குவதாக புனையப்பட்டுள்ளது. பழமையின் பிடியிலிருந்து மாறாமல், சாதித் தளையில் கட்டுண்டு கிடக்கும் சமூக அவலத்தை சாடும் கதையாக, ‘திருமலை கண்ட திவ்ய ஜோதி’ படைக்கப்பட்டுள்ளது.
-– புலவர் சு.மதியழகன்