முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்

விலைரூ.290

ஆசிரியர் : பா.சு.ரமணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரி பற்றில்லாத நிலையை இளம் வயதிலேயே அடைந்தார். தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உடல் நலிந்தாலும் உள்ளம் உறுதியடைந்தார். ஊருக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.

சேஷாத்ரி கதையை படிக்க படிக்க கண்ணீர் ஊற்றாய் பெருக்கெடுப்பது உண்மை. பக்தியும், தெய்வ வழிபாடுமாக வேறெந்த சிந்தனைகளும் இல்லாத தெய்வக்குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பது படிப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும்.

ஆனாலும் சாதாரண தாயாக வம்ச விருத்திக்காக மகன் திருமணம் செய்து கொள்ளாததால் ஏற்படும் ஏக்கம்... அந்த ஏக்கமே சாவை வரவழைப்பது போன்ற உணர்வுகள் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன. படிக்கும் போது சேஷாத்ரி தவிர வேறெந்த உணர்வும் ஏற்படாது என்பது நிதர்சனம்.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us