ஸ்வாமி

விலைரூ.990

ஆசிரியர் : ரா. கணபதி

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

127, பிரகாசம் சாலை, சென்னை-108. (பக்கம்: 1264)

அன்பில் ஆனந்த நிறைவோடு குவலயத்தில் உள்ள கோடானுகோடி சாய் பக்தர்கள் பாடி பரவசத்தோடு ஸ்வாமி என அழைக்கப்படுகின்ற தவயோகி, நடமாடி நம்மையெல்லாம் பேரருளில் திளைக்க வைத்த அவதார நாயகர் ஸ்ரீசத்ய சாய்பாபா.
அத்தகைய ஞான புருஷருடைய அவதார அருட்கொடை வரலாற்றை மிகத் தெளிவாய் பக்தி ரசம் மிளிர ஒவ்வொரு வரியிலும் ஆன்மிக உயிரூட்டி பதிவு செய்துள்ளார் பேராசிரியர் ரா.கணபதி.
"சுருகியும் லயமும் எனத் துவங்கி, "ஆனந்தசாயி என 56 அத்தியாயங்களில் நிறைவடைகிறது இப்பெருநூல். பகவான் பாபா அவர்களைப் பற்றியும், அவர்களது தெய்வ தரிசனம், அருட்கொடை, அருட்பேருரை போன்ற பல அவதார மகிமைகள் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உலகின் பல மொழிகளில் வந்துள்ளன. ஆனால், இந்நூலுக்கு நிகரேதுமில்லை என்று வியக்க வைக்கின்ற அளவிற்கு, பகவான் சத்ய சாயியின் அருளாசியால், ஆசிரியர் படைத்துள்ளார்.
 ஸ்வாமி உடுத்திக் களைந்த ஆடை நிகழ்த்திய அற்புதம் (பக்: 90), புஷ்பங்களால் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் அற்புதம் (பக்: 261), கர்மக் கடனை தீர்ப்பதற்காக வியாதி என்பது உண்டாகும்போது, முத்துமாலை பலனளிக்காது என தெளிவான அருள்வாக்கு (பக்: 435), ஞானசக்தியோடு, மாயா சக்தியும் கலந்து வந்ததே இந்த சத்யசாயி ஆகாரம் (சரீரம்) என்ற அருள்மொழி (பக்: 778) என, அவதார அற்புத மகிமைகளை மிக அற்புதமாக பதிவு செய்துள்ள ஞானப்பேழை இந்நூல்.
நம்மோடு வாழ்ந்து, நாம் பார்த்து ரசித்து, வாழ்த்தி, வணங்கிய நடமாடும் தெய்வமாய் உலா வந்த, அவதாரப் புருஷரது வாழ்வியல் சரிதை நூல், ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய ஞானக் கருவூலம்.
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us