பூமியில் எந்த உயிரினமும் தண்ணீர் இன்றி வாழ முடியாது. அதை தான், நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் கூறியுள்ளார். தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நீரின் மகத்துவம் புரியாமல் அலட்சியப்படுத்துவதால் எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதை கட்டுரைகளில் தொகுத்து தரும் நுால்.
நிலத்தடி நீர் வற்றி, அபாய கட்டத்தை அடைய, பசுமைப் புரட்சி எவ்வாறு காரணமாகிறது என்பதை பேசுகிறது. குளத்தை ஆக்கிரமித்தால் ஏற்படும் விளைவு, ஏன் நதிகளை இணைக்க வேண்டும் போன்ற செய்திகளை உடையது. நீர் பற்றாக்குறையை தீர்க்கும் வழிமுறைகள் அலசப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரச்னையும் உருவாக காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் என விபரங்களுடன் கூறியுள்ள நுால்.
– ஞானி