முகப்பு » ஆன்மிகம் » ருத்ராட்சம்

ருத்ராட்சம்

விலைரூ.190

ஆசிரியர் : கீர்த்தி

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கலியுகத்தில் மக்களை காப்பது, சிவபெருமான் பாதம் கழுவிய புனித நீரும், அவரது திருச் சின்னங்களும், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுதலுமே என்று உரைக்கும் நுால். ருத்ராட்சம் ஆன்மிக நம்பிக்கைக்கு மட்டுமல்ல; கலைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவ- -– மாணவியர், தொழிலதிபர் என யாவரும் அணிந்து பலன் பெறலாம் என்கிறது.

ருத்ராட்சம் தோன்றிய கதை, அதன் வகைகள், தாவரவியல் பண்புகள், பல முக விபரங்கள், ஆன்மிக, மருத்துவ மகிமை, மந்திரங்கள், மாலை வகைகள், பூஜை முறைகள், ஜெபம் செய்யும் முறை, உபநிஷதங்களில் -சமய இலக்கியங்களில் உள்ள செய்திகள், புராணக்கதைகள் என பல விபரங்கள் உள்ளன. பல வகை ருத்ராட்ச முகங்கள், மாலை வகைகளையும் அறிய உதவும். ஆன்மிக அன்பர்களுக்கு உதவும் நுால்.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us