இறைவன் அருளிய செயல்களைக் கூறும் புராணங்கள் வாயிலாக, சிவ வடிவங்கள், 64 எனக் கூறும் நுால். இயற்கை சக்திகளான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே லிங்கம் என்ற உருவம் என்கிறது.
ஆதிமனிதனின் வழிபாட்டுச் சின்னம், லிங்கம் தான் என்று கூறுகிறது. உலக இயக்கத்திற்கும், நன்மைக்கும் எடுத்த தோற்றங்கள் தான், அஷ்டாஷ்ட வடிவங்கள் என்கிறது.
கச்சியப்ப முனிவரின் கந்த புராணம், சிவஞான முனிவரின் காஞ்சி புராணம், சிவ பராக்கிரமம், உபதேச காண்டம், காசி காண்டம் ஆகியவை 64 சிவ வடிவங்களைச் சிறப்பிப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. சிவன்அடியார்கள் தவறாது படிக்க வேண்டிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து