வித்தியாசமான இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ள நுால். உலகில் ஆண்கள் செய்து வருவதை எல்லாம், எளிய புனைவுகள் வழியாக பெண்களும் செய்வதாகக் காட்டுகிறது.
புத்தகம், ‘நைட் புல்லா குடிச்சிட்டு மட்டையாகி இருந்தாள் நிலா’ என்று தான் துவங்குகிறது. ஆண்கள் செய்யும் அத்தனை அராஜகங்களையும் பெண் கதாபாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளது. அவற்றை, ‘கல்லானாலும் மனைவி, புல்லானாலும் பொண்டாட்டி’ என, கண்ணீருடன் ஏற்றுக்கொள்கிறான் கணவன்.
வாழ்வில் பிரதியின் பிம்பங்களை காணும்போது உண்மை சுடும். ஆணாதிக்கத்துக்கு எதிராக, பெண்களின் மன வெடிப்பாக புத்தகம் முழுதும் கருத்துகளை பார்க்க முடிகிறது. இது தான் சமூகத்தின் லட்சணம் என முகத்திரையை விலக்கிக் காட்டும் நுால்.
– சிவசு