கடல் பயணங்களை மையமாக உடைய நாவல் நுால். இப்படியும் நடந்திருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி பரபரப்பூட்டுகிறது.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் கடவுளின் மீதான நம்பிக்கையை சிந்துபாத் இழக்கவில்லை. அத்தனை பயணங்களிலும் ஆண்டவன் காப்பாற்றுகிறார். அவனுக்கு தந்தை சொன்ன வாக்கியம் நம்பிக்கை ஊட்டுகிறது.
பிறந்த நாளை விட இறுதி நாளே சிறந்தது. உயிரோடு இருக்கும் நாயை விட செத்துவிட்ட சிங்கம் மேலானது. பேராசையை விட வறுமையே உகந்தது. இவற்றை வாழ்க்கையின் அர்த்தம் புரிய விவரிக்கிறது.
உடல், மனதில் வலியில்லாமல் சாக முடிந்தால் அதுவே பெரும் பாக்கியம். இது மாதிரி தத்துவங்கள் இடையிடையே உள்ளன. பெரியவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்