முகப்பு » ஆன்மிகம் » அல்லல் போக்கும் அருட்

அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்

விலைரூ.35

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்: 200, விலை: ரூ.35)

`அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்' அனைத்தும் ஒரே தொகுப்பாக அதுவும் கையடக்கப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அருமையான பைண்டிங். அட்டையில் திருஞானசம்பந்த சுவாமிகள் படம். இதில் மொத்தம் 41 பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் நம் வாழ்விற்கு அடித்தளம் இட்டு, நம்மை மேம்படுத்தும் எண்ணங்களின் வெளிப்பாடாக அடிமன ஆசைகளை வெளிப்படுத்தும் தூய பிரார்த்தனைகளாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. தொழில் வளம் பெருக, எல்லா பேறுகளும் பெற, பணத்தட்டுப்பாடு அகல, கல்விச் செல்வம் பெற, சுகப்பிரசவமாக, தீராப்பிணி தீர என்று வாழ்வின் சகல பிரச்னைகளையும் உள்ளடக்கிய அருமையான தலைப்புகளில் பதிகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மந்திரங்கள் எனும் தகைமை பெற்ற இப்பதிகங்களை அன்றாடம் ஒன்று வீதம் படித்து, மனனம் செய்தாலே போதும், அல்லல்கள் நீங்கி, அருள் நலங்கள் அனைத்தும் கை கூடி வரும். யாவர்க்கும் உதவும் மலிவான மந்திரப் பேழை எனலாம் இந்நூலை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us