உலக புகழ்பெற்ற இலக்கியம் தந்த அந்தோன் செகாவ் கதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் தமிழில் தரப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த சிறுகதைகள் எழுதியவர் ரஷ்ய எழுத்தாளர் அந்தோன் செகாவ். வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக சூழலை அவதானித்து, அந்த படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகாரம் எப்படி எல்லாம் சுழன்றபடி மாறும் என்பதை மிக நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில், 12 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் உள்ள கதாபாத்திரங்களை இன்றும்காண முடியும். உலகின் எந்த மூலையிலும் இது போன்ற பாத்திரங்களை காண முடியும். அவை தவிர்க்க முடியாததாக இருப்பதையும் அறிய முடியும். அதிகாரத்தின் பண்புகளை உணர்த்தி, மனித மாண்பை வெளிப்படுத்துகிறது. தலைசிறந்த படைப்புகள் உடைய நுால்.
– ஒளி