நெல்லிக்கனி தந்த மூதாட்டிக்கு உதவும் எண்ணத்தில் மகாலட்சுமியை நினைத்து சங்கரர் சூட்டிய, கனகதாரா ஸ்தோத்திரம் பாமாலை நுால். இதை பாடினால் வாழ்வில் எல்லா நன்மைகளும், செல்வங்களும் பொழியும் என்கிறது.
முதல் ஸ்தோத்திரம், ‘பழ மரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போல் தெய்வத்தை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்கிறது. இது போல், 22 ஸ்லோகங்கள் உள்ளன. வடமொழியில் அமைந்தவற்றுக்கு தமிழில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
காலை, மாலை விளக்கு ஏற்றுவதன் சிறப்பை விளக்குகிறது. லட்சுமி தேவி எல்லா நன்மைகளும் அளிப்பார் என்று கூறுகிறது. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ வழிகாட்டும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்