காலை எழுந்தது முதல், இரவு படுக்கைக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரங்களை வரிசைப்படுத்தி விவரிக்கும் நுால். பண்டிகை நாட்களில் சொல்ல வேண்டியவற்றையும் விவரிக்கிறது.
ஒவ்வொரு மந்திரத்திற்கும் தனித்தனி உச்சரிப்பும், உரிய பலனும் உண்டு என்கிறது. துளசியை வழிபடும் முறை, சகுனத் தடைகள் நீங்க, இரவு சாப்பிடும் முன், கவலைகள் நீங்க, மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, வரலட்சுமி விரதம், பவுர்ணமி பூஜை போன்ற தலைப்புகளில் விளக்கம் தருகிறது.
புண்ணிய நதிகளை நினைத்தபடி குளித்தாலே தக்க பலன் உண்டு என்கிறது. கங்கை நதியை வழிபடுபவன் விஷ்ணுலோகம் செல்வான் என்று கூறுகிறது. மந்திரங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வழிகாட்டும் நுால்.
– முனைவர் ரா.நாராயணன்