முகப்பு » அரசியல் » துப்பாக்கிமொழி

துப்பாக்கிமொழி

விலைரூ.200

ஆசிரியர் : மருதன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: அரசியல்

Rating

பிடித்தவை
மருதன், முகில், ச.ந. கண்ணன், இரா. முத்துக்குமார்
'காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள்.

சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இந்த இயக்கங்களைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும்போது மட்டும் தினசரிகளில் வெளியாகும். எப்போதாவது சமரசப் பேச்சுகள் நடக்கும். பேச்சு முடியுமுன் மீண்டும் உயிர்ப்பலிகள் தொடங்கி விடும்.

அச்சமூட்டும் ஆள்பலம், மிரளவைக்கும் செயல்திட்டங்கள், கவலை தரத்தக்க வெளிநாட்டுத் தொடர்புகள், பணபலம், ஆயுதபலம் என்று இயங்கும் இத்தகைய இயக்கங்களைப் பற்றிய முழுமையான, விரிவான தகவல்கள் அடங்கிய நூலொன்று தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை.

அஸ்ஸாம் தொடங்கி, தமிழகம் வரை செயல்படும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய பல நுணுக்கமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்துமே இந்திய மண்ணில் தோன்றி, இங்கேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்கள். இதே காரணத்தால்தான் பாகிஸ்தானில் வேர்கொண்டு காஷ்மீரில் செயல்படும் இயக்கங்கள் குறித்த தகவல்கள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us