முகப்பு » வரலாறு » அளசிங்கப் பெருமாள்

அளசிங்கப் பெருமாள்

விலைரூ.75

ஆசிரியர் : சுநிர்மலானந்தர்

வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

   பக்கம்: 382   

சேவை, தியாகம், தேசபக்தி மற்றும் குருபக்தியின் ஓர் உன்னத வரலாறு என்று மேலட்டையிலேயே பதிவு செய்துள்ள இந்த நூல், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வியக்கத்தக்க கல்விச்சேவை, ஏழைச் சமூகத்திற்கு ஆற்றிய பணி ஆகியன குறித்துப் பல பயனுள்ள உபயோகமான தகவல்களைக் கொண்ட ஒரு அற்புதமான நூல். தமிழகம் முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இயக்கம் வேரூன்றிக் கிளைவிட்டு நீக்கமறப் பரவியுள்ளதை இன்று நாம் பார்க்கிறோம். ஆனால், இந்த அரும்பணிக்குப்பாடுபட்டவர்களைப் பற்றி அறிந்திருக்கிறோமா என்றால், தயக்கத்துடன் மவுனத்தைத்தான் அனுஷ்டிப்போம்.

இந்த நூல் நமக்கு அந்த தயக்கத்தை விரட்டுகிறது. குறிப்பாக, சுவாமி விவேகானந்தரின் முதல் அமெரிக்க (சிகாகோ) பயணம் பற்றிய தகவல்களை (பக்கம் 102) படிக்கையில் தமிழனாகத் தமிழ்நாட்டில் பிறந்ததற்காகப்பெருமைப்படத்தூண்டுகிறது.சுவாமிவிவேகானந்தர், அளசிங்கப் பெருமாள் இடையே நிலவிய குரு- சிஷ்ய உறவு வியப்பிலாழ்த்துகிறது. நிறைய, அரிய புகைப்படங்கள். நல்ல நான்கு உள்ளங்களின் பொருளுதவியின் துணையினால், மிகக் குறைந்த விலையில் மிகச் சிறந்த நூலை, தமிழுக்கு வழங்கியுள்ள பரமஹம்சரின் அமைப்புக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us