முகப்பு » ஆன்மிகம் » அருள் தரும் யோகி ஸ்ரீ அரவிந்தர்

அருள் தரும் யோகி ஸ்ரீ அரவிந்தர்

விலைரூ.180

ஆசிரியர் : பா.சு.ரமணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘என் வாழ்க்கையைப் பற்றி யாரும் எழுத முடியாது. ஏனெனில் அது எல்லாரும் பார்க்கும்படியாக மேற்பரப்பில் நிகழ்ந்ததன்று...’ என்று யோகி ஸ்ரீ அரவிந்தர் கூறியிருக்கிறார். அவரிடம் தெரிந்த விஷயங்களே இவ்வளவு மலைப்பு தருவதாக இருக்குமானால், அறியப்படாத ஆன்மிக மறுபக்கத்தை எப்படி வரையறுப்பது என மலைப்பைத் தருகிறது இந்த நுால்.

ஸ்ரீஅரவிந்தர் ஓர் இலக்கியவாதி. மெத்தப் படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். இரக்க குணம் கொண்டவர். 10க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பல முகங்கள் கொண்டவர். இவற்றில் எதுவும் ஒட்டாத, மாறுபட்ட தன்மையைக் கொண்டதாய் விளங்குகிறது

அவரது யோகத் திருமுகம். அரவிந்தர் பற்றி விவரிப்பதோடு, ஸ்ரீ அன்னைக்கு அளித்த முக்கியத்துவம், ஆஸ்ரமத்தை அன்னை நடத்திய விதம் ஆகியவையும் கூறப்பட்டுள்ளது. ஆன்மிக நுாலாக மட்டுமல்லாமல், சுதந்திரப்போராட்ட வரலாற்றின் இறுக்கமான பக்கங்களையும் உணர்த்தும் நுால்.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us