முகப்பு » வாழ்க்கை வரலாறு » ரத்தத்தின் ரத்தமே

ரத்தத்தின் ரத்தமே

விலைரூ.160

ஆசிரியர் : எஸ்.ரஜத்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தியேட்டரைத் தாண்டி மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர் எம்.ஜி.ஆர்., பற்றிய அனுபவ நினைவுகளை சுவாரசியமாக தரும் நுால். படப்பிடிப்பின் போது, உடல் களைத்தாலும் மனம் களைக்காமல் ரசிகர்களை கொண்டாடும் தலைவனாக இருந்தது பற்றி கூறுகிறது. பட தயாரிப்பின் போது, சாமானியர் தேவை அறிந்து சத்தமின்றி உதவும் பண்பாளராக இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இப்படி எம்.ஜி.ஆர்., பண்புகளை சொல்லும் நுால்.

‘எம்.ஜி.ஆர்., தவிர யாரையும் ஹீரோவாக போட மாட்டேன்...’ என்று சின்னப்பா தேவர் சொன்னதன் பின்னணி பற்றி ஒரு கேள்விக்கு பதிலை கொண்டுள்ளது. பிரமிக்க வைத்த ஆளுமைகள் ஒன்று கூடி, எம்.ஜி.ஆர்., என்ற பொக்கிஷத்துடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இது பரவசம் ஊட்டுகிறது. அனுபவ கோர்வையாக ஆசிரியரே சொல்வது போல எழுதப்பட்டுள்ளது. அதனால் தான், மாமனிதரின் வாழ்க்கை வரலாற்று சுவாரசியங்களை விறுவிறுப்பு குன்றாமல் படிக்க முடிகிறது.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us