முகப்பு » கட்டுரைகள் » தெய்வத்திற்கு என்ன

தெய்வத்திற்கு என்ன வேலை?

விலைரூ.40

ஆசிரியர் : தா.பாண்டியன்

வெளியீடு:

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
பக்கங்கள்:96. அச்சிட்டோர்:சபரி பிராக்ஸ், சென்னை-14. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ஜனசக்தியில் 1968 ஜனவரி 28 ல் தொடங்கி, 1969 டிசம்பர் 21 வரை எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். விம்கோ தொழிலாளர்கள் போராட்டம், தமிழ் ஆட்சிமொழி, ஆட்சி மொழி விவகாரத்தில் தி.மு.க.,வின் அன்றைய அணுகுமுறை, தொழிலாளர்கள் மீது அன்றைய மத்திய மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அடக்குமுறை, வேலை இல்லாத் திண்டாட்டம், காமராஜரின் சோசலிச முழக்கம், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம், சோவியத் யூனியன்-பாகிஸ்தான் ஆயுத ஒப்பந்தம், காங்கிரஸ் கட்சி நடத்திய ஆகஸ்ட் போராட்டம், சென்னையில் நடந்த <உலக வர்த்தகத் தொழில் காட்சியில் கலந்து கொண்ட பல்கேரிய நாட்டுப் பெரியவரின் போர்க்கால அனுபவங்கள்,வியட்நாம் நாட்டுப் பேரறிஞர் ஹோசிமின் எழுதிய உயில் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளை இந்த நூலில் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us