முகப்பு » கட்டுரைகள் » நம்பிக்கை நட்சத்திரம் நரேந்திர மோடி

நம்பிக்கை நட்சத்திரம் நரேந்திர மோடி

விலைரூ.250

ஆசிரியர் : மோடிதாசன் தேவமூர்த்தி

வெளியீடு: செந்தில் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரதமர் மோடியின் சாதனைகளை தொகுத்து கூறும் நுால். சமூக ஆர்வம் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. குஜராத் முதல்வராக இருந்த போது மின்துறையில் குறைபாடுகளை சரி செய்து, ‘ஜோதி கிராம்’ திட்டத்தில் கிராமங்களை ஒளிரச் செய்தவர்.

அவரது வித்தியாசமான சிந்தனை, செயல்பாடு இருமுறை இந்திய பிரதமராக அரியணையேற்றியுள்ளது. திட்ட பணிகளுக்கு அதிக ஒதுக்கீடு, கங்கையை துாய்மை செய்தல், சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சி, குடும்ப சேமிப்பை ஊக்குவித்தல், செலவின மேலாண்மை, குடிநீர் வழங்கல், இளைஞர் நல மேம்பாடு, துறைமுக மேம்பாடு, நதி நீர் போக்குவரத்து என வளர்ச்சி திட்டங்களுக்கு அடிகோலியது குறித்து எழுதப்பட்டுள்ளது.
இணையதளத்தை பயன்படுத்தி வெற்றிக்கனியை பறித்த காவிய நாயகர் என பதிவிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை சொல்லும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us