வாழ்க்கை மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகளையும் கூறும் இலக்கிய வடிவங்களாக நாவல் உள்ளது. அதை படைப்பவர் வரிசையில் கணினி யுகத்திற்கு முந்தைய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜானகிராமன், நகுலன், அம்பை, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன் இலக்கிய தடங்களை விவரிக்கும் நுால்.
சி.சு.செல்லப்பா, சு.நா.சுப்ரமணியம் நாவல்கள் மனித நாகரிகத்தின் புதிய பகுதியை ஆவணப்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டின் சமூக மேற்பரப்பு நகரமயமாக்கி விட்டபோதிலும், அகப்பரப்பு இன்றும் இனக்குழு சமுதாய பண்புகளைக் கொண்டிருப்பதாகவே இருக்கிறது என்பதை பதிவிட்டுள்ளது.
ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து இலக்கியத் தடம் அமைய வேண்டியதை விவாதிக்கும் நுால்.
-–- புலவர் சு.மதியழகன்