மும்பையில் சாலையோர கடைகள் நடத்தும் தமிழர்களின் வாழ்க்கை நிலையை கூறும் நாவல் நுால். ஆங்கில பள்ளியில் படிக்க வைத்து நல்ல நிலையில் கொண்டு வர துடிக்கும் தந்தை. படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கும் மகனை, மதிப்பெண் குறைவால் தந்தை அடிக்க, மகன் ரயில் ஏறி செல்கிறார்.
எங்கெல்லாம் சென்றார், ராணியை சந்தித்த தருணம், இருவரின் வாழ்க்கையை காலச்சூழல் எப்படியெல்லாம் மாற்றியது என்பதை உணர்வுப்பூர்வமாக கூறுகிறது.
நல்லது, கெட்டது தெரியாமல் திக்குமுக்காடுவதை படபடப்புடன் பேசுகிறது. கெட்ட சகவாசம் ஒட்டிக் கொள்வதை எச்சரிக்கிறது. பிள்ளைகளிடம் காட்டும் கெடுபிடி, எந்த திசைக்கு அழைத்து செல்லும் என்ற எதார்த்தத்தை கூறுகிறது. எளிய நடையுடன் சுவாரசியம் குறையாமல் வாசிக்க துாண்டும் நாவல்.
-– டி.எஸ்.ராயன்