சிறிய வடிவத்தில் கையடக்கமாக வந்துள்ள குறுநாவல் நுால். ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதைக்கு நெருக்கமாக நின்று பேசுகிறது.
வாழ்வும் மரணமும் எதிரெதிர் ஆனவை அல்ல. மரத்தில் மறைந்திருக்கும் வேர் பகுதியும், வெளிப்பட்ட கிளை பகுதியும் போல ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவை என்பதை வலியுறுத்துகிறது.
விபத்தா, தற்கொலையா என்று தீர்மானிக்கப்படாத வாழ்வில் சில சம்பவங்கள் டைரிக் குறிப்புகள் வழியாக விவரிக்கப்படுகின்றன. இரண்டு பெண்களின் பார்வையில் விரியும் கதை சுவாரசிய அடுக்குகளை உள்ளடக்கியுள்ளது. தருணங்கள் தான் வாழ்க்கை. அது தான் மரணமும்.
குறிப்பிட்ட தருணத்தை தாண்டிவிட்டால் மரணமும் நகர்ந்து செல்லும் என்று நம்பிக்கையான வரிகளை கருத்தாக முன் வைத்துள்ளது. சுவாரசியமாக உள்ள நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு