எழுத்தாளராக புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற அனுபவத்தை சுவாரசியம் குன்றாமல் பகிரும் நுால். வாசகர்களுடனான சந்திப்புகளை நயம்பட விளக்குகிறது.
எழுத்தாளர் – வாசகர் இணைப்பு பாலமாக விளங்குவது புத்தக கண்காட்சி. அது ஒரு பண்பாட்டு நடைமுறையாக மாறி வருவது குறித்த விபரத்தை தருகிறது. பொருளாதாரம், நிதி மேலாண்மை, சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதி வருபவர் சந்திக்கும் வாசகர்களை பற்றியுள்ளது.
ஒரு புத்தகம் எவ்வாறெல்லாம் வரவேற்பு பெறுகிறது என்பதை அலசுகிறது. வாசகர்களிடம் பெற்றுக்கொள்ளும் தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. படைப்பாளராக துறை சார்ந்து பெற்ற அனுபவ சாரத்தை வெளிப்படுத்துகிறது. வாசிப்பு, எழுத்தில் அக்கறை கொண்டோருக்கு பயன் தரும் நுால்.
– ராம்