கருத்துகளையும், மேடைப்பேச்சு அனுபவத்தையும், பதிவு செய்துள்ள நுால்.
சிறந்த சொற்பொழிவாளராக வழிகாட்டுகிறது. பேச்சாளராக மாற கடைப்பிடித்த பயிற்சி, விழாக்களுக்கு அழைத்த பெருமக்களைப் பற்றி பதிவு செய்துள்ளது. சொல்ல வந்த கருத்துகளை, முழுமையாக, சுவையாக, மனம் மகிழும்படி, அஞ்சாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிப்பவரே சிறந்த சொற்பொழிவாளர் என எடுத்துரைக்கிறது.
பெர்னாட்ஷா பேச்சுக்கலையைக் கற்றுத் தேர்ந்தது ருசிகரமாகச் சொல்லப்பட்டுள்ளது. பேச்சால் திரும்பிப் பார்க்க வைத்த சுவாமி விவேகானந்தர், சர்வ சமயப் பேரவையில் உரையை தொடங்கும் முன் தவித்தார் என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது. மேடைப்பேச்சில் ஜொலிக்க நினைப்பவர்களுக்கு வழிகாட்டி நுால்.
– டாக்டர் கார்முகிலோன்