அன்றாடம் சந்தித்த நிகழ்வுகள், படித்த செய்திகள் அடிப்படையில் சிந்தித்து எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு நுால். நாட்டு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை உடையது.
முதலில், ‘மரம் வளர்ப்போம் சூழல் காப்போம்’ என அமைந்துள்ளது. பூமியை சூழ்ந்துள்ள ஆபத்து குறித்து விழிப்பை தரும் வகையில் உள்ளது. தொடர்ந்து, ‘அதிக வேகம் ஆபத்தில் முடியும்’ என, விபத்தால் ஏற்படும் தீமைகளை சுட்டிக்காட்டுகிறது. உலக அளவில் புள்ளி விபரத்தையும் தருகிறது.
இவை போல் 25 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நாட்டு வளர்ச்சியில் பங்களிப்பு அளிக்கும் சிந்தனையை துாண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையிலான நுால்.
– ராம்