இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் மூலக்கருத்து மாறியுள்ளதை சான்றுகளோடு பதிவு செய்துள்ள ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பெரும்பாணாற்றுப்படைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அணுகுமுறையும், அறிஞர் ராகவையங்கார் அணுகுமுறையும் ஒப்பீடு செய்து காட்டப்பட்டு உள்ளது. அடைமொழி வழி வரலாற்றாக்கம், சொல் வருகைநிலை வழி வரலாற்றாக்கம், புராண இதிகாச குறிப்புகள் வழி வரலாற்றாக்கம் போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறது.
குறுந்தொகை வழியில் சமஸ்கிருதம் முன்னிறுத்தும் கருத்துக்களை விரிவான ஆய்வாக வழங்குகிறது. ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு