செயல்களை விமர்சித்து அறிவுரை கூறினால் மனம் ஏற்க மறுக்கும். அதேநேரம் ஒருவரை எடுத்துக்காட்டாகச் சொல்லும் அறிவுரையை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் விருப்பம் வந்துவிடும். அந்த மனோதத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
மனதை உறுத்தும் கசப்புணர்வு கொடுக்கும் சம்பவங்களை எழுதுவதால், அது நீங்கி விடும் என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. சிசு கொலை, ஓடிப்போனவர்கள் பற்றிய கட்டுரை, கடன் பட்டவர் படும் கஷ்டங்கள் என துயரங்களை தொட்டுக்காட்டி செல்கிறது.
பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை போன்ற சமூக பிரச்னைகளை அழகாக சித்தரிக்கிறது. மனிதர்கள் வாயிலாக மருத்துவம் பேசப்பட்டிருக்கிறது. அனுபவங்களில் நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் விதைக்கப்பட்டுள்ளன.
– சிவா