சர்வேசனின் துதி மந்திரங்கள் உடைய ஸாம வேதம் நுால்.
பழங்காலத்தில் இசை பாடல்களாக ரிஷிகள் பாடியவை, வேயகானம், அரண்யேகேய கானம், ஊஹ கானம், ஊஹ்யம் என பிரிவுகளாக தொகுக்கப்பட்டு உள்ளன.
இவை 1,875 மந்திரங்களாக உள்ளன. இவற்றை ஷட்ஜம், பஞ்சமம், மத்தியமம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற சுரங்களால் இசைப்பதை குறிப்பிட்டு பதவுரை எழுதப்பட்டுள்ளது. மந்திரங்களுக்கு உரிய ஸ்வரங்கள் வகுத்து தரப்பட்டுள்ளன.
பொருள் உணர்ந்து ஸாம வேத பாடல்களை பாராயணம் செய்வோருக்கு பயன் தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்