பெண் கதாபாத்திரத்தை மையமாக்கி படைக்கப்பட்ட நாவல் நுால். ஆபாசமான ஈர்ப்போ, அதிர்ச்சியூட்டும் விடலைத்தனமான சித்தரிப்போ இன்றி, பக்குவமாக மென்னுணர்வுகளுடன் தெளிந்த நீரோடையாக பாய்கிறது.
பேரண்டத்தின் இயக்க விதிகள், மனித அறிவுக்கு எட்டாதவை; காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற புரிதலின்றி, கட்டுப்படுத்த முயலும் மமதையை தவறென உணர்த்துகிறது. குறைந்த கதைபாத்திரங்களே உலவுகின்றன. ஆண் – பெண் உறவில் ஏற்படும் உணர்வு, சாதிய சிக்கல்கள், நெருக்கடியில் உதவும் பண்பு என, உறவு நிலைகளை தொட்டுக் காட்டுகிறது.
ஆண் – பெண் நட்பில், காதலில் சமூகம் இன்று நிலை மாறி இருக்கிறது என்பதையும், உரையாட எவ்வளவோ விஷயங்கள் இருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. இனிய வாசிப்பு அனுபவம் தரும் நாவல்.
– ஊஞ்சல் பிரபு