நீரின் தேவையையும், சிறப்பையும் விளக்கிக் கூறும் நுால். மழை பெய்யாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும் என்பதை 10 கதைகளில் எளிய முறையில் விளக்கி கூறுகிறது.
ஏழை படும் பாடு, ஆசை, கடல் மழை, மறுபிறவி, துாறல் நின்னு போச்சு போன்ற தலைப்புகளில் கதைகளாக திருக்குறள் கருத்தை விளக்குகிறது. மழையின் சிறப்பு கூறப்படுகிறது. வறுமையால் சாவின் விளிம்பிற்கே சென்று மீண்ட கதை கூறப்படுகிறது. மழை உயிரை வாழ வைக்கும் அமிழ்தம் என்பதை விளக்குகிறது.
பட்டணத்தில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையை விளக்குகிறது. தண்ணீரே உணவாகிறது என்பதை குறள் வழி கூறுகிறது. திருக்குறள் கருத்துகளை மனதில் பதியுமாறு எளிமையான நடையில் விளக்கியுள்ளது. பயன் தரும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்