சனாதன தர்மத்தை விளக்கும் நுால்.
சனாதன தர்மத்தை அடையாளப்படுத்த ஏற்பட்ட பெயரே, ‘ஹிந்து’ என்கிறார் காஞ்சி மஹா பெரியவர். சனாதனம் வெறும் சடங்குமுறை அல்ல; வாழ்வுக்கான வழிமுறை. அது வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை; வாழ்வியல் முறையைச் சொல்கிறது. இதன் உயிர்மூச்சே சத்தியம்தான். நம் அரசு சின்னத்தில் இருக்கும் வாக்கியம் ‘சத்யமேவ ஜெயதே’ அதாவது, வாய்மையே வெல்லும்.
‘சனாதனம்’ என்ற வார்த்தையை வைத்து பலவிதமாக கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சனாதனம் என்றால் என்ன என்பது, தெளிவாக எளிய நடையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய விளக்கமான புத்தகம்.
- – இளங்கோவன்