இந்திய கலாசாரம் குறித்த பார்வைகளை முன்வைக்கும் கட்டுரைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நுால்.
தொன்மையான சிவ தாண்டவங்கள் ஒவ்வொன்றின் பின்னணியில் உள்ள பிரபஞ்ச தத்துவங்களின் குறியீடுகளை ஆன்மிக நோக்கில் விளக்கி, உலக வாழ்வில் இசையும் நடனமும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.
கலைநோக்கம் கொண்ட தனிநபர்களின் பங்களிப்புகளே பிற்காலத்தில் நாட்டின் பண்பாட்டுக் கூறுகளாக மாறுவதைக் கூறுகிறது. தனிநபர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகளும் கலையாகப் பரிணமிப்பதை எடுத்துக் காட்டுகிறது.
இலக்கியக் கருத்தியல்கள் ஹிந்து சமய நோக்கில் விமர்சனப் பார்வைகளாகத் தரப்பட்டுள்ளன. பண்டை கால கலை உணர்வுகள், துறவு மனப்பான்மை மற்றும் தொல்கலை மரபுகளை அலசும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு