நடிகர் மோகனின் உதயகீதம் துவங்கி, அஜித்தின் ஆசை திரைப்படம் வரை வெற்றி வாகை சூடிய திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள நுால். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடியே பழைய நினைவுகளை அசை போட, மறக்க முடியுமா என்ற தலைப்பில் வெளியான திரைப்படங்கள் பற்றிய குறிப்புகளை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான ஆண்டு, நடித்த முக்கிய நடிகர்கள், இயக்குனர். இசையமைப்பாளர், மனம் கவர்ந்த பாடல்கள் என எல்லாவற்றையும் தொகுத்து காட்டுகிறது. திரைப்படத்துறை, திரை விரும்பிகள் இதை படித்தால் கேள்விகளுக்கும் சிரமமின்றி பதில் சொல்லலாம்.
– தி.செல்லப்பா