ஏழு திவ்யதேசங்களை குறித்த தகவல்கள் அடங்கியுள்ள நுால்.
ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் 15 பக்கங்களில் உள்ளது. மாமல்லபுரம், திருவிடந்தை, திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருநின்றவூர், திருவள்ளூர் என சென்னை அருகே கோவில்கள் வரலாறும், சோளிங்கர் திருத்தலம் குறித்தும் இடம் பெற்றுள்ளது.
நுாலைப் படித்து, கையில் எடுத்துச் சென்றால் எளிதாகப் பார்த்து வரலாம். பெருமாளை மட்டும் தான் தரிசிக்க முடியுமா என்றால், பகவானை விட பக்தனே பெரியவன் என்ற சித்தாந்தப்படி, திருவள்ளூர் தலத்தில் அஹோபிலத்தை ஆட்சி செய்த ஜீயர் பெருமக்களின் ஜீவசமாதிகளையும் தரிசிக்கலாம். இது போன்ற அரிய தகவல்கள் அடங்கிய நுால்.
– தி.செல்லப்பா