ஆறு சிறுகதைகளும், ஒரு நெடுங்கதையும் உள்ள தொகுப்பு நுால். மனைவியை அதிகமாக நேசிக்கும் கணவர் பற்றிய கதைகள் அதிகம்.
சாவை பற்றி சிந்திக்கும் வார்த்தை பிரயோகங்கள் மிகவும் உள்ளன. 20 ஆண்டுகளாக பேசாத மனைவிக்கு செய்த தப்பை, துரோகத்தை மன்னிக்காத நிலையில் சாவின் விளிம்பில் மன்னிப்பு கேட்கிறார் கணவர். மறுநாள் காலை பிழைத்த நிலை இருவரும் சந்தோஷிக்கும் நிலையை எளிமையாக புரிய வைக்கிறது கதை.
திருவாரூர் சித்தர் குரு தட்சிணாமூர்த்தி. அவரது இன்னொரு பெயர் கருணாநிதி. அங்கு பிறந்த அரசியல் தலைவருக்கும் இரண்டு பெயர்கள் என்ற வர்ணனை சிறப்பு. நெடுங்கதையில் ருத்ரன் என்ற படைப்பு அற்புதம். மனதில் நிறையும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்