வாராஹி வழிபாடு பற்றி எடுத்துரைக்கும் நுால். பழங்காலத்தில் வழிபாடு இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. மன்னன் ராஜராஜசோழன், போருக்குச் செல்லும் முன் வாராஹியை வழிபட்டது, தஞ்சை பெரிய கோவிலுக்குள் கோவில் கட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறது. ஆறு ஆதாரச் சக்கரங்கள் உடலில் உள்ளன. புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் தியானம் செய்தால், அவள் காட்சி தருவாள்.
சினம் கொண்டால் தீயாவாள். அன்பு குணம் வந்தால் மழை ஆவாள். எட்டு கரங்களில் தண்டம், கலப்பை, சங்கு சக்கரம் கொண்டவள். கருப்பு நிற உடை, சிம்ம வாகனம் கொண்டு, வராக பெருமாள் அம்சமாய் விளங்குவதைக் குறிப்பிடுகிறது. வாராஹி அம்மனை வழிபடும் முறையை கூறும் பக்தி நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்