கதைகளை திரைக்கதையாக்கமாக மாற்றி வழங்கும் நுால்.
பனியன் கம்பெனி நடத்தும் திருநங்கையர், அங்கு பணிபுரியும் ஆண்கள் பார்வையை, ‘கூவாத்துார் குலமகள்’ என்ற கதை வலியுறுத்துகிறது. திருநங்கையர் குடும்ப வாழ்க்கை, திருமண வாய்ப்புகளில் மனநிறைவு கொண்டனரா என அலசுகிறது.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள், தொழில் துவங்கி வசதியாகின்றனர். சின்ன பிரச்னையால் பிரிய, அவர்கள் சார்ந்த உறவுகள் நட்பை தொடர்கின்றனர். அதில் இருவருக்கு காதல் உருவாக, சமூகம் சேர்த்து வைத்ததா என, நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே.. கதை ஜாதி கோரம் பற்றி கூறுகிறது.
காட்சி, இடம், பொருள் என தனித்தனி தலைப்புகளுடன் திரையில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்