போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். தவிக்க விடும் தந்தை, ஆதரவு நீட்டும் அம்மா, படிப்பை நிறுத்தி வேலைக்குச் செல்லும் மகனின் வலியை, அப்பா வந்தான் கதை பலரின் வீட்டுச்சூழலை நினைவூட்டுகிறது.
ரயில் நிலைய ரிக் ஷா தத்தாவுக்கு, ஆட்டோ, கார் ஓட்டிகள் ஏற்படுத்தும் துயரம், பின்னாளில் ரிக் ஷாவுக்கு கிடைக்கும் மகத்துவத்தை, ‘கனிந்த மனிதர்கள்’ கதை கனிவுடன் பகிர்கிறது.
உழைப்பு சுரண்டல், குறைந்த ஊதியம், எதிர்காலத்தைக் கூறும், ‘நிற்க அதற்குத் தக’ கதை, படிப்புக்கேற்ற பணியுடன் பொருத்திப் பேசுகிறது. நடுஆளு, ஒரு மனுசி ஓராயிரம் பைத்தியங்கள், அருள் போன்ற கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வை அலசுகின்றன.
– டி.எஸ்.ராயன்