தமிழ் கடவுள் முருகனின் தோற்றம், சிறப்பு பற்றி விளக்கும் நுால். இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.
முருகன் வரலாறும் சிறப்புகளும், திருமுருகாற்றுப்படையும் முருகப்பெருமானும், அருணகிரிநாதர், அறுபடை வீடுகளில் திருப்புகழ், கந்தர் அலங்காரத்தில் முருகப்பெருமான் போன்ற தலைப்புகளில் சிறப்புகளை கூறுகிறது.
மனதில் அச்சம் தோன்றினால் ஆறுமுகம் அதை நீக்கும் என்கிறது. ஓங்காரத்தின் ஒலி வடிவம்இறைவன் என சுட்டுகிறது. கந்த புராண பெருமையை சொல்கிறது. அருணகிரிநாதர் பாடி அருளிய கந்தர் அனுபூதியின் சிறப்பை கூறுகிறது. முருகனின் போற்றி வழிபாட்டோடு நிறைவடைகிறது.
முருகனை அறிந்து கொள்ள உதவும் நுால். வழிபாட்டால் விளையும் நன்மையை கூறுகிறது.
– புலவர் ரா.நாராயணன்