விஞ்ஞானக் கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். ஜலதோஷத்திற்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவர் பற்றிய சிறுகதை, ‘கோடி ரூபாய் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. ஆராய்ச்சியின் விளைவை அறிந்து கொள்ளாமல் ஆகாயத்தில் சிறகடித்தவர், மருந்தின் பக்க விளைவை அறியாமல் விட்டுவிட்டார். விளைவு, மருந்து உட்கொண்ட குழந்தைகளின் மூக்கு பெரிதாகி விட்டது.
கற்பனைக் கிரகங்களை உருவாக்கி பெண் அழகை வியக்கிறது, ‘கிளுகிளுப்பாய்’ என்ற கதை. இதில் நகைச்சுவைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. மனித நுாலகம் கதை, 2060ல் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. வேற்றுக் கிரகவாசியுடன் தொடர்பு கொண்ட பெண்ணின் வாழ்க்கை பற்றியது. எளிய மொழிநடையில் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்