அரசியல். சமூகப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் நுால்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நர்மதா கொலை செய்யப்பட்டாளா, தற்கொலை செய்துகொண்டாளா என்ற சந்தேகத்தின் மீது நின்று சுவாரசியமாக கதை நகர்த்தப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் ஒரு புறம், அரசியல் பின்புலம் மற்றொரு புறம் என பின்னல் களம் சிறப்பாக உள்ளது.
அரசியலில் நேர்மை தவறாத வாசுதேவன் குடும்பப் பின்னணியும், அரசியல் வாழ்வும் விரித்துச் செல்வதற்கு பயன்படுகின்றன. அதற்கேற்றவாறு இரு தலைமுறை சார்ந்த நிகழ்வுகளாக இயங்குகிறது.
எதிரும் புதிருமான குணாம்சங்கள், அரசியல் களத்தில் கொலைகளுக்கு காரணமாகும் கதாபாத்திரம், அதை எதிர்த்து தேர்தலில் வாகை சூடுதல் என வேகத்துடன் நகர்கிறது. சுவையான வாசிப்புக்கு ஏற்ற நல்ல நாவல் நுால்.
– ராம.குருநாதன்