சிந்தனையைத் துாண்டும் சிரிப்பு கதைகளின் தொகுப்பு நுால்.
திப்பிலி நாடு, ராஜகுமாரன், மந்திரி குமாரி, நின்றபடியே துாங்கும் கலை பயின்ற மெய்க்காப்பாளர்கள், சமையல் அறையில் கரம் பக்கோடா வாசனையில் கிரங்கும் திப்பிலி ராஜா என கதாபாத்திரங்களை மையப்படுத்தி சிரிக்கச் சிரிக்க கதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.
திப்பிலி நாட்டு ராஜகுமாரனை சுக்கு நாட்டின் ஒற்றர்கள் பிணையக் கைதியாக பிடித்துக் கொள்வதும், விடுவிக்க, 1,000 பொற்காசுகள் செலவால் கஜானா காலியாகிறது. அதை நிரப்ப வரி விதிப்பும், புலவர் பாடும் கன்னா பின்னாவும் அதற்கு விளக்கமும் ‘குபீர்’ சிரிப்பை வரவழைக்கிறது. சிரிப்பிற்கிடையில் அருந்தமிழ்ப் பாடல்களையும், சங்க இலக்கியக் கருத்துகளையும் உள்ளடக்கிய நுால்.
– ஊஞ்சல் பிரபு