பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாலின சமத்துவத்திற்கு முன்னால் நிற்கும் ஈகோ, புரிதலின்மை, பழமைவாதத்தை சுட்டிக் காட்டுகிறது.
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் இணைய வன்முறையை சாடுகிறது. சினிமாவில் பெண்களை பற்றிய மதிப்பீடுகளை கூறுகிறது. ஆணவ கொலையின் கோரத்தை விவரிக்கிறது.
நட்புக்கு பெண் அஞ்சலாமா என கேட்கிறது. மூன்றாம் பாலினத்தவர் உணர்வுகளை பற்றி சொல்கிறது. தத்தெடுப்பில் நடக்கும் சிக்கல்களை கூறுகிறது. பாலியல் விழிப்புணர்வு இல்லாததை கவலையுடன் கூறுகிறது. முற்போக்கு பேசும் பெண்களிடம் மனைவியை பழக விடாத ஆண்களை சாடுகிறது. சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த நுால்.
– -டி.எஸ்.ராயன்