புதிதாக துவங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை மதிப்பிட்டு, வருங்காலத்தை எடுத்துரைக்கும் நுால். உற்பத்தி, சேவை மற்றும் பல துறை நிறுவன செயல்பாடுகளில் உள்ள சாதக, பாதக அம்சங்களை அலசலாக தருகிறது.
அறிமுகம் துவங்கி, ஊபர் வரை 17 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பல்வேறு வகையில் வித்தியாசமான சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களை பற்றி எழுதப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள ஒரு அறையை ஒரு நாள் மட்டும் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் யுக்தியை பயன்படுத்தும் நிறுவனத்தை பற்றிய விபரங்களை தருகிறது. இது போல், புதுமை எண்ணங்களுடன் இயங்கும் தொழில்கள் பற்றி எளிய நடையில் கூறுகிறது. தொழில் துவங்க விரும்புவோருக்கு பயன் தரும் நுால்.
– மதி