புரியும் வண்ணம் எளிய உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ளது சிவபுராணம் நுால். பிரம்மாவும், நாராயணனும் வணங்கிய பகவானின் பெருமையும், பாவங்களை அகற்றும் சிவ தத்துவ ஞானமும் விவரிக்கப்பட்டுள்ளன. நாரதரின் தோற்றம், தாரகனுக்கு பிரம்மன் அளித்த வரங்கள், திரிபுரம் எரித்த நிகழ்வு, பிள்ளையாரின் தோற்றம், சித்தி புத்தியை மணந்து கொண்ட நிகழ்வு போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.
அனுசூயைக்குத் தண்ணீர் கொடுத்த கங்கை, இறைவன் திருநீலகண்டரான வரலாறு, பிறைநிலவை சூடியது, திருநீற்றையும் சுடலையையும் அணிந்தது, பிரகலாதனுடைய சிவபக்தி என பல செய்திகள் உள்ளன. நிறைவாக அஷ்டமி விரதம், சதுர்த்தசி சிறப்பு, சிவராத்திரி விரத முறை, நித்திய வழிபாடுகள் நிரல் படுத்தப்பட்டுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்