சமுதாய நல்வாழ்வுக்கு பெருந்தொண்டுகள் செய்த சித்தர்களின் வரிசையில் தோன்றிய கோரக்கர் கூறிய கருத்துகளை கூறும் நுால். சந்திரரேகை 200, நமனாசத்திறவுகோல் 100, இரவிமேகலை 75, முத்தாரம் 91, நாதபேதம் 20, தனித் தொகுப்பு 9, போகநாதர் கற்ப சூத்திரம் 18 என்ற புத்தக தொகுப்பாக உள்ளது.
யோகநெறி, காற்றுப் பயிற்சி, நரை திரை நீங்க யோகபானம், கலிகாலத்தின் கோலம், பேய்- பில்லி சூனியம் ஓட்ட வழி, இல்லறத்தில் யோக முத்தி, உண்மை கடவுளென்பது காற்று என சந்திரரேகை கூறுகிறது.
கற்பூரச் சுண்ணம், முப்புச் சுண்ணம், ஈடு வசிய மருந்து, சித்தர் தெரிசன விதி போன்றவை இரவிமேகலையில் உள்ளன. சித்தர்களின் தத்துவங்களை உணர்த்தும் நுால்.
– முனைவர் கலியன்சம்பத்து