நுாற்பாலை இளம்பெண்களின் உழைப்பை வலியுடன் கூறும் நாவல் நுால்.
குடும்பச் சூழலால் வேலைக்குச் செல்லும் பெண், நுாற்பாலை அவலங்களை சகிக்க முடியாமல் வெகுண்டெழுகிறார். பிரச்னைகளை எதிர்கொண்டு கடந்து, திரும்புவதை விவரிக்கிறது. சிறையும், நுாற்பாலையும் ஒன்று என்கிறது. இதை சம்பவங்கள் வழியாக வெளிச்சம் போடுகிறது.
நுாற்பாலை சத்தம் எப்படி சங்கீதம் ஆகாதோ, அதுபோல அங்கு உழைப்புக்கு ஊதியம் கிடைக்காது என்கிறது. மனவலிமையால் கஷ்டங்கள், கவலைகளை சுமக்க முடியும் என விவரிக்கும் நம்பிக்கை நுால்.
– -டி.எஸ்.ராயன்