குடும்ப கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்த, 19 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருத்தமான படங்களுடன் பிரத்யேக செய்தியையும் சொல்கின்றன கதைகள்.
மணப் பெண்ணை பார்க்க, நான்கு பேர் வந்தது தப்பு... பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை, பலர் பார்ப்பது சரியான நடைமுறையா என்ற விமர்சனத்தை முன் வைத்து நவீன கருத்துக்களை கேள்வி கேட்கிறது.
தேர்வு முறைகளால், சாதாரண தொழிலாளர் குடும்பங்களிலும் கல்வி அறிவு கிடைக்கும் நடைமுறையை எடுத்துக்காட்டுகிறது. சமூகத்தில் ஆங்காங்கே நடக்கிற சம்பவங்களை கருக்களாக உடையது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மகளை ஏமாற்றும் தந்தை போன்ற கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியத்தை நிலைநாட்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்