இரண்டு பகுதிகளாக உள்ள புத்தகம். முதலில் கட்டுரைகள் தமிழ் வளம் பேசுகின்றன. வல்லின, இடையின, மெல்லின எழுத்துக்கள், உடலில் எங்கிருந்து பிறக்கின்றன என்பது நல்ல ஆய்வு. தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும். தமிழ் எழுத்துக்களை எப்படி ஹிந்தி எழுத்தாக மாற்றலாம் என்ற கட்டுரையும் உள்ளது.
இரண்டாவது பகுதி, தமிழ் கவிஞர்களைப் பற்றியது. கவியரங்குகளில் பாடிய ஏழு கவிஞர்கள் பற்றி பாடிய பாடல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. ‘கொட்டிலிலே கட்டி வைத்த மாடா என்று குரல் கொடுத்து பெண்ணினத்தை விழிக்க வைத்தான்’ என்று பாரதியை பற்றிய பாட்டு வரிகள். சந்தம் பொங்குகிறது. படிக்க துாண்டும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்