நவரத்தினங்களாக மிளிரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வங்கி அதிகாரி அனுபவம் பளிச்சிடுகிறது. சிலர் நியாயமாக வேலை செய்வதை கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் மனிதாபிமானத்தோடு செயல்படுவதைக் காட்டுகிறது. சமுதாயத்திற்கு நீதி சொல்கின்றன.
இளம் வயதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித காதல் அரும்பி இருக்கும். அது ஒருதலைக் காதலாக இருந்தாலும், சேர முடியாததாக இருந்தாலும் சரி, முதற்காதலின் பசுமை, மனம் முழுக்க வியாபித்து இருக்கும். இதை அழகான நடையில், ‘மனதினால் சிந்தித்து!’ கதை சொல்கிறது.
மருத்துவமனையில் சாகப்போகும் நேரத்தில், ஒரு மனிதனின் சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டுகிறது, ‘சொந்தம்’ சிறுகதை. சுவையான நுால்.
– சீத்தலைச் சாத்தன்