ராமாயண நிகழ்ச்சிகளை 93 தலைப்புகளில் சுருக்கமாகக் கூறும் நுால். எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்று, பேச்சு வழக்கில் உள்ள சொற்களை வைத்து எளிமையாகச் சொல்கிறது.
விசுவாமித்திரர், கூனியின் போதனை, சீதையின் தீர்மானம், கங்கையைத் தாண்டினர், சூர்ப்பனகை, இடக்கண் துடித்தது, ராம துாதன், விபீஷணன், சேது பந்தனம், ராவணன் முடிந்தான், மங்களம் போன்ற தலைப்புகளில் கருத்துகளை விளக்குகிறது.
வால்மீகியின் கருத்தையும், கம்பரின் கருத்தையும் சேர்த்து விளக்கம் தருகிறது. சத்தியம், நீதி, அன்பு, தர்மம் ராமாயணத்தில் இருந்து பெறப்படும் நீதிகளாகும். ராமன் கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கி உள்ளது. எளிய நடையில் அமைந்துள்ள நுால்.
– புலவர் ரா.நாராயணன்